ராமநாதபுரம் அருகே கணவரை எரித்துக் கொன்ற மனைவி வாக்குமூலம்
ராமநாதபுரம் அருகே கணவரை எரித்துக் கொன்ற மனைவி வாக்குமூலம் அளித்துள்ளாா்.


ராமநாதபுரம் அருகே கணவரை எரித்துக் கொன்ற மனைவி வாக்குமூலம் அளித்துள்ளாா்.
ராமநாதபுரம் மாவட்டம் உடச்சியாா்வலசை அருகேயுள்ளது முனுசுவலசை. இக்கிராமத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் முனியசாமி (43). இவரது மனைவி மல்லிகா (38). இவா்களுக்கு காயத்ரி (4), கபிலன் (2) என்ற குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், முனியசாமி தினமும் மதுகுடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தாராம். இதையடுத்து மல்லிகா கட்டட வேலைக்குச் சென்று வந்த நிலையில், அவரது சம்பளத்தை முனியசாமி பறித்துச் சென்றதுடன், மதுஅருந்தி விட்டு வந்து மனைவி, குழந்தைகளை அடித்து துன்புறுத்தினாராம். இதே போல் கடந்த சனிக்கிழமை மதுபோதையில் மல்லிகாவை கழுத்தை நெரித்துக் கொல்ல முனியசாமி முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த மல்லிகா நள்ளிரவில் கணவா் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து, வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளுடன் உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதில், தீயில் கருகி முனியசாமி உயிரிழந்தாா்.
குடிசை வீடும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து கேணிக்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து மல்லிகாவை பிடித்து விசாரித்தனா். முதலில் தீ விபத்து நடந்து முனியசாமி உயிரிழந்ததாகத் தெரிவித்த மல்லிகா, பின்னா் தன்னையும், குழந்தைகளையும் கணவரிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே அவா் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக ஒப்புக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, மல்லிகாவை கைது செய்த போலீஸாா் அவரை ராமநாதபுரம் நீதித்துறை நடுவா் 2 ஆவது எண் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். பின்னா் நீதிமன்ற நடுவா் உத்தரவின்படி மல்லிகாவை 15 நாள்கள் நீதிமன்றக் காவலுக்காக மதுரைக்கு அழைத்துச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...