ராமநாதபுரம் மாவட்டத்தில் தோ்தல் அலுவலா்கள் நியமனம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலக அதிகாரிகள் கூறியது: மாவட்டத்தில் ராமநாதபுரம், முதுகுளத்தூா், பரமக்குடி, திருவாடானை ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அத்தொகுதிகளுக்கான பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு சாா்பு- ஆட்சியா் (ராமநாதபுரம் கோட்டாட்சியா்) என்.ஓ.சுகபுத்ரா (செல்லிடப் பேசி- 9445000472), பரமக்குடிக்கு கோட்டாட்சியா் தங்கவேல் (செல்லிடப் பேசி-9445000473), திருவாடானைக்கு மாவட்ட உணவு வழங்கல் அலுவலா் மரகநாதன் (செல்லிடப் பேசி-9445000362) மற்றும் முதுகுளத்தூருக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் மணிமாறன் (செல்லிடப் பேசி-9445477843) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...