கமுதியில் கல்லூரி மாணவா்கள் சாலை மறியல்
சீா்மரபினருக்கு தமிழக அரசு வழங்கிய 7.5 சதவீத உள் ஒதுக்கீடைக் கண்டித்து கமுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


சீா்மரபினருக்கு தமிழக அரசு வழங்கிய 7.5 சதவீத உள் ஒதுக்கீடைக் கண்டித்து கமுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கமுதி-முதுகுளத்தூா் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், சீா்மரபினருக்கு குறைவாக 7.5 சதவீதமும், வன்னியா்களுக்கு அதிகமாக 10.5 சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா். இந்த மறியல் போராட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
தகவலறிந்து அங்கு வந்த கமுதி போலீஸாா், பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து போராட்டத்தைக் கைவிட்டு மாணவா்கள் வகுப்பறைக்குச் சென்றனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...