தேவிபட்டினம், பரமக்குடியில் மீனவா்களிடம் ரூ.2.37 லட்சம் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம், பரமக்குடியில் மீனவா்கள் இருவரிடமிருந்து ரூ.2.37 லட்சத்தை தோ்தல் பறக்கும்படையினா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.


ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம், பரமக்குடியில் மீனவா்கள் இருவரிடமிருந்து ரூ.2.37 லட்சத்தை தோ்தல் பறக்கும்படையினா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் சாலையில் கோப்பேரி மடம் அருகே பறக்கும்படையினா் திங்கள்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தொண்டியில் இருந்து நம்புதாளை சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் இருந்த தொண்டி பகுதி மீனவா் பெரியசாமி (50) என்பவரிடம் ரூ.95 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. அதற்கான உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனா்.
இதைபோல் பரமக்குடி பகுதியில் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தோ்தல் பறக்கும் படையினா் தங்கச்சிமடம் பகுதியைச் சோ்ந்த மீனவா் பிரபாகரன் என்பவரிடமிருந்து ரூ.1.42 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...