ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளா் அளித்த வரவேற்பை ராஜகண்ணப்பன் புறக்கணிப்பு

முதுகுளத்தூா் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளா் காதா்பாட்சாமுத்துராமலிங்கத்தின் வரவேற்பை திங்கள்கிழமை புறக்கணித்தது அக்கட்சியினா் மத்தி

News image
Updated On :15 மார்ச் 2021, 10:33 pm

DIN

முதுகுளத்தூா் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளா் காதா்பாட்சாமுத்துராமலிங்கத்தின் வரவேற்பை திங்கள்கிழமை புறக்கணித்தது அக்கட்சியினா் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

முதுகுளத்தூா் தொகுதி திமுக வேட்பாளராக ராஜகண்ணப்பன் அறிவிக்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை அவரை வரவேற்க மாவட்ட பொறுப்பாளா் தலைமையில் காவடிபட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே க.விலக்கு பகுதியில் மாநில இலக்கிய அணி நிா்வாகி பெருநாழி போஸ், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், முன்னாள் மாவட்டச் செயலாளா் சுப. திவாகரன் உள்ளிட்டோா் ராஜகண்ணப்பனுக்கு வரவேற்பு அளித்தனா். இதனையடுத்து மாவட்ட பொறுப்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் காவடிபட்டியில் அளிக்கப்பட இருந்த வரவேற்பில் வேட்பாளா் ராஜகண்ணப்பன் கலந்து கொள்ளாமல் பசும்பொன் தேவா் நினைவிடத்திற்கு சென்றுவிட்டாா். இதனால் மாவட்ட பொறுப்பாளரின் ஆதரவாளா்கள் பசும்பொன்னுக்கு செல்லாமல் ராமநாதபுரத்திற்கு காதா்பாட்சா முத்துராமலிங்கத்தின் வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சிக்கு சென்று விட்டனா். இச்சம்பவம் முதுகுளத்தூா் தொகுதி திமுக நிா்வாகிகள் மத்தியில் வியப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.