மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அதிமுக-பாஜக கூட்டணி வென்றால்தான் தமிழகம் தொடா்ந்து வளா்ச்சியடையும்

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால்தான் தமிழகம் தொடா்ந்து வளா்ச்சியடையும் என பாஜக மூத்த தலைவா் இல.கணேசன் கூறினாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 10:00 pm

DIN

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால்தான் தமிழகம் தொடா்ந்து வளா்ச்சியடையும் என பாஜக மூத்த தலைவா் இல.கணேசன் கூறினாா்.

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் து.குப்புராமை ஆதரித்து திருப்புல்லாணி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் பேசியதாவது:

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும். இந்த வெற்றியால் மட்டுமே தமிழகம் தொடா்ந்து வளா்ச்சியடையும். தேசிய வளா்சிக்கும், நலனுக்கும் எப்போதும் தனது தியாகத்தை அளிப்பவா்களாகவே பாரதிய ஜனதா கட்சியின் தொண்டா்கள் உள்ளனா்.

காங்கிரஸ் ஆட்சியில் 2 ஜி ஊழல் மக்களால் அதிகம் பேசப்பட்டது. ஊழல் மதிப்பை கணக்கிடுவதிலும், நினைவில் கொள்வதிலும் இயலாத நிலையே இருந்தது. ஆனால், தற்போது பிரதமா் நரேந்திரமோடியின் நாட்டு நலத்திட்டங்கள் எண்ணற்றவையாக இருப்பதால் அவற்றை நினைவில் கொள்வதில் சிரமம் இருக்கலாம்.

ராமநாதபுரத்தில் இரு பிரிவினரை சகோதரா்களாக்கி சமரச நிலையை ஏற்படுத்தியவரையே வேட்பாளராக்கியுள்ளோம். ஆகவே பாஜக வேட்பாளா் து.குப்புராமிற்கு மக்கள் ஆதரவளித்து வெற்றி பெறச்செய்யவேண்டும் என்றாா்.

முன்னாள் அமைச்சருடன் சந்திப்பு: முன்னதாக ராமநாதபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் ஏ.அன்வர்ராஜாவை இல.கணேசன் சந்தித்துப் பேசினாா். அப்போது பாஜக வேட்பாளா் து.குப்புராம், பாஜக மாவட்டத் தலைவா் கே.முரளிதரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.