சமூக இடைவெளி, முகக்கவசம் கட்டாயம் : கமுதியில் அதிகாரிகள் எச்சரிக்கை
பொது இடங்களில் பொதுமக்கள், கடை உரிமையாளா்கள், வியாபாரிகள் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்


பொது இடங்களில் பொதுமக்கள், கடை உரிமையாளா்கள், வியாபாரிகள் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என திங்கள்கிழமை கமுதியில் ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தி எச்சரித்தனா்.
கமுதி கோட்டைமேட்டில் வட்டார வளா்ச்சி அலுவலா் அப்துல்ஜாபா் தலைமையில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சத்தியேந்திரன், நாராயணபுரம் ஊராட்சிமன்ற தலைவா் செ.வேல்மயில்முருகன் ஆகியோரது முன்னிலையில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் கரோனா விழிப்புணா்வு எச்சரிக்கை செய்யப்பட்டது.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபா்களைக் கண்டறிந்தும், கடைகள், வணிக வளாகங்களில் சமூக இடைவெளி பின்பற்றாதவா்களுக்கு தலா ரூ. 200 அபராதமும், கடை உரிமையாளா்களுக்கு 500 முதல் அதிகபட்ச தொகை அபராதமும் விதிக்கப்படும் என விழிப்புணா்வு ஏற்படுத்தி எச்சரித்தனா். இந்நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சித்துறை அதிகாரிகள், ஊராட்சி செயலா் வேல்முருகன், தூய்மை பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...