தீபாவளி பண்டிகை: திருவாடானை சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை 

தீபாவளியை முன்னிட்டு திருவாடானை சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
தீபாவளி பண்டிகை: திருவாடானை சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை 

தீபாவளியை முன்னிட்டு திருவாடானை சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

திருவாடானையில் வாரம்தோரும் திங்கள்கிழமை ஆட்டு சந்தை நடைபெருவது வழக்கம். இந்த சந்தை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.36 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டு தனியார் பாராமரிப்பில் சந்தை நடைபெருகிறது. இந்த சந்தையில் ஆடுகள் விற்பனை நடைபெற்று வருகிறது. 

சந்தைக்கு திருவாடானை சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து செம்மறி மற்றும் வெள்ளாடுகளை அதிகளவு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். சந்தை அதிகாலை 3 மணியில் இருந்து நடைபெற்றன. இந்த சந்தைக்கு திருவாடானை மட்டுமல்லாது ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை  மாவட்டம், மதுரை, திண்டுக்கல், நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருவது வழக்கம். 

இன்னும் மூன்று தினங்களில் தீபாவளி பண்டிகை நடைபெற உள்ள நிலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. இதில் திங்கள்கிழமை நடைபெற்ற சந்தையில் 10 கிலோ கொண்ட ரூ 6000 லிருந்து ரூ 7000 வரை விற்பனை ஆனது. இன்று நடைபெற்ற சந்தையில் ரூ 1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றன. 

ஆடுகளை வாங்கிய வியாபாரிகள் சரக்கு வாகனம், லாரி, இரண்டு சக்கர வாகனம் ஆட்டோக்களில் ஏற்றி சென்றனர். இந்த ஆண்டு தொடர் மழை காரணமாக ஆடுகள் விலையும் சற்று அதிகமாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com