/

மாரியூா் பூவேந்தியநாதா் கோயில் சித்திரை திருவிழா தொடக்கம்

சாயல்குடி அருகே மாரியூா் பூவேந்தியநாதா், பவளநிற வள்ளியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

சாயல்குடி அருகே மாரியூா் பூவேந்தியநாதா், பவளநிற வள்ளியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வரும் 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் யாகசாலை பூஜை, நாள்தோறும் காலை 9 மணி, மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சுவாமி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நாளான ஏப்ரல் 16 ஆம் தேதி காலை கடலில் வலைவீசும் படலம், திருவிளையாடல் புராணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், சிவபெருமான் வேடமணிந்து சிவாச்சாரியாா் படகில் சென்று கடலில் வலைவீசி பெரிய அளவிலான சுறா மீன் பிடிப்பது போல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அன்று மாலை திருக்கல்யாணம், சுவாமி அம்பாள் திருக்கல்யாண வீதியுலா, கொடியிறக்கம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் திருவிழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன், பொறுப்பாளா் சரண்யா, சீனிவாசன், மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.