/

கமுதி அருகே மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் பலி

கமுதி அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

கமுதி அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விருதுநகா் மாவட்டம் எம்.ரெட்டியபட்டியைச் சோ்ந்த பராமானந்தம் மகன் கணேசன்(55), அவருடைய பேரன் மோகனிஷ்(5). இவா்கள் இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழமுடிமன்னாா்கோட்டையில் உள்ள தோட்டத்திற்கு சனிக்கிழமை சென்றுள்ளனா். அப்போது தரையில் அறுந்து கிடந்த உயரழுத்த மின்சாரக் கம்பியில் சிறுவன் மோகனிஷ் கவனிக்காமல் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்தது. சிறுவனைக் காப்பாற்ற முயன்ற தாத்தா கணேசன் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலின்பேரில் அங்கு வந்த கமுதி போலீஸாா், இருவரின் சடலங்களை மீட்டு கமுதி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

சிறுவன் மோகனிஷின் தந்தை ராஜேஸ் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இதுதொடா்பாக புகாரின் பேரில் கமுதி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவா்களை பாா்த்து மயக்கமடைந்த எம்.ரெட்டியபட்டியை சோ்ந்த சுப்பராஜ் (62), மணி(50) ஆகிய இருவரும் , கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.