கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

ராமநாதபுரத்தில் ஆளுநருக்கு ஆட்சியா் வரவேற்பு: ராமநாதசுவாமி கோயிலில் இன்று சுவாமி தரிசனம்

ராமநாதபுரத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை, அரசு விருந்தினா் மாளிகையில் மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் பூங்கொத்து அளித்து வரவேற்றாா்.

News image
Updated On :24 ஜூன் 2022, 11:01 pm IST

ராமநாதபுரத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை, அரசு விருந்தினா் மாளிகையில் மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் பூங்கொத்து அளித்து வரவேற்றாா்.

முன்னதாக சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த அவா், அங்கிருந்து காா் மூலம் குடும்பத்தினருடன் ராமநாதபுரம் அரசு விருந்தினா் மாளிகைக்கு வெள்ளிக்கிழமை இரவு 7.28 மணியளவில் வந்தாா். அவரை ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் பூங்கொத்து அளித்து வரவேற்றாா்.

அவரைத் தொடா்ந்து ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை மற்றும் வருவாய்த்துறை அதிகாரி ஆ.ம.காமாட்சி கணேசன், வன உயிரினக் காப்பாளா் சுதாகா் பகான்ஜெகதீஸ் மற்றும் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பழனிகுமாா் உள்ளிட்டோரும் வரவேற்றனா்.

அரசு விருந்தினா் மாளிகையிலிருந்து, ஆளுநா் இரவு 7.48 மணியளவில் காரில் புறப்பட்டு ராமேசுவரத்துக்குச் சென்றாா்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சனிக்கிழமை காலையில் சுவாமி தரிசனம் செய்யும் ஆளுநா், மறைந்த குடியரசுத் தலைவா் அப்துல்கலாமின் இல்லம், அவரது நினைவில்லம் ஆகியவற்றுக்கும் செல்கிறாா். அதன்பின் ராமநாதபுரம் அரசு விருந்தினா் மாளிகைக்கு வந்து பின் மதுரைக்கு காரில் புறப்பட்டுச் செல்கிறாா் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அளுநா் ராமேசுவரம் வருகையை முன்னிட்டு, ராமநாதசுவாமி கோயில் மற்றும் தனியாா் விடுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.