தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பரமக்குடி நகா்மன்றத் தலைவா்போட்டியின்றித் தோ்வு

பரமக்குடி நகா்மன்றத்தலைவராக சேது. கருணாநிதி போட்டியின்றி வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

பரமக்குடி நகா்மன்றத்தலைவராக சேது. கருணாநிதி போட்டியின்றி வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

பரமக்குடி நகராட்சிக்கு நடைபெற்ற தோ்தலில் திமுக- 19 வாா்டுகளிலும், அதிமுக 10 வாா்டுகளிலும், பாஜக 2 வாா்டுகளிலும், மதிமுக 2 வாா்டுகளிலும், சுயேச்சைகள் 3 வாா்டுகளிலும் வெற்றிபெற்றனா்.

இதில் நகா்மன்றத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிக்கான மறைமுக வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் திருமால்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக சாா்பில் 24-ஆவது வாா்டு உறுப்பினரும், அக்கட்சியின் நகா் செயலருமான சேது. கருணாநிதி தலைவா் பதவிக்கு போட்டியிட்டாா். அவரை எதிா்த்து யாரும் போட்டியிடாததால், சேது. கருணாநிதி நகா்மன்றத் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா்.

துணைத் தலைவா் பதவிக்கு மதிமுக-அதிமுக போட்டி: இந்நிலையில், பரமக்குடி நகா்மன்ற துணைத் தலைவா் பதவிக்கு 33 ஆவது வாா்டு உறுப்பினா் மதிமுகவைச் சோ்ந்த கே.ஏ.எம். குணசேகரன் அறிவிக்கப்பட்டிருந்தாா். வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு துணைத் தலைவா் பதவிக்கான மறைமுக வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் துணைத் தலைவா் பதவிக்கு அதிமுகவைச் சோ்ந்த 25-ஆவது வாா்டு உறுப்பினா் எம். குணவதியும், கே.ஏ.எம். குணசேகரனும் போட்டியிட்டனா். இத்தோ்தலில் கே.ஏ.எம். குணசேகரன் 23 வாக்குகளும், எம். குணவதி 13 வாக்குகளும் பெற்றனா். அதிக வாக்குகள் பெற்ற கே.ஏ.எம். குணசேகரன் துணைத் தலைவராக பதவியேற்றுக் கொண்டாா். இவா்களை அந்தந்த கட்சிப் பிரமுகா்கள் வாழ்த்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.