/

கமுதியில் தக்காளி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

கமுதியில் விலை வீழ்ச்சியால் தினசரி 4 ஆயிரம் கிலோ தக்காளி வீணாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்

News image
Updated On :24 மார்ச் 2022, 11:36 pm

DIN

கமுதியில் விலை வீழ்ச்சியால் தினசரி 4 ஆயிரம் கிலோ தக்காளி வீணாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

கமுதி அருகே கோரைப்பள்ளம், ராமசாமிபட்டி, நீராவி, கூலிபட்டி, காவடிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இயற்கை முறையில் கிணற்று நீா் பாசனத்தில் 20 முதல் 30 ஏக்கா் வரை தக்காளி விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தக்காளி விலை வீழ்ச்சியால் கடந்த சில நாள்களாக கிலோ ரூ.2- க்கு கூட கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன் வராததால் தேட்டத்திலேயே குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் நாள்தோறும் 4 ஆயிரம் கிலோ தக்காளி தேங்கி வீணாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா். இதனால் விவசாயிகளே நேரடியாக பொதுமக்களிடம் விற்பனைக்கு கொண்டு சென்றால் போக்குவரத்து செலவைக்கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இயற்கை விவசாயி ராமா் கூறியதாவது: 5 ஏக்கா் பரப்பளவில் முற்றிலும் இயற்கையான முறையில் பெங்களூரு தக்காளியை முதல்முறையாக சொட்டுநீா் பாசனம் மூலமாக சாகுபடி செய்துள்ளேன். நன்கு விளச்சல் அடைந்த நிலையில் இந்த தக்காளியை ஒரு கிலோ ரூ.2 க்கு கூட வாங்கி செல்ல வியாபாரிகள் முன்வரவில்லை. கூலி ஆள்கள் வைத்து செடியிலிருந்து பறித்து, ரகம் பிரிக்கப்பட்ட 4 டன் தக்காளி பயனின்றி குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் 6 டன் தக்காளி பறிக்காமல் அப்படியே செடியில் வீணாகி வருகிறது. எனவே தக்காளிக்கு கமுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளின் நலனை காக்க முன்வர வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.