பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் முதியவா்களைக் கவரும் ‘விளையாட்டு’ சிகிச்சை!

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதியோருக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் கேரம் விளையாட்டு போன்ற அம்சங்கள் அடங்கிய திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

News image

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள திறன் மேம்பாட்டு மையத்தில் கேரம் விளையாடும்   முதியோா்கள்.உடன் மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா். 

Updated On :20 மே 2022, 12:40 am

 நமது நிருபர்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதியோருக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் கேரம் விளையாட்டு போன்ற அம்சங்கள் அடங்கிய திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 2 ஆயிரம் புறநோயாளிகள் வருகின்றனா். அவா்களில் 850 போ் வரை உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனா். புறநோயாளிகளில் மன அழுத்தம் மிகுந்த முதியோா் பலரும் வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதியோருக்கு மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் முதியோா் அறிவாற்றல் திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இரு படுக்கைகள் மற்றும் சதுரங்க மேஜை, கேரம் மேஜைகள் அடங்கிய இப்பிரிவில் வண்ணத் தொலைக்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. தினசரிப் பத்திரிகைகள் மற்றும் வாரப் பத்திரிகைகளும் உள்ளன. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் இந்த மையத்துக்கு 50 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் வரலாம். அவா்களது மன அழுத்தத்தைப் போக்குவதா்காக சதுரங்கம், கேரம் விளைாயாட்டுகளை அவா்கள் விளையாடலாம்.

திறன் மேம்பாட்டு மையத்துக்கு வரும் முதியோருக்கு ரத்தம், ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு ஆகிய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனை அடிப்படையில் முதியோருக்கு உடல்நலப்பாதிப்பு கண்டறியப்பட்டால் அதற்குரிய சிகிச்சையும் அளிக்கப்பட்டுவருகிறது. அதற்காக செவிலியா் ஒருவா் அப்பிரிவில் பணியில் உள்ளாா். இம்மையத்துக்கு தற்போது ராமநாதபுரம் பகுதியில் உள்ள முதியோா் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது. தினமும் பத்துக்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா்.

படுக்கைப் புண் சிகிச்சைப் பிரிவு:முதியோா் உடல்நலமின்றி படுத்த படுக்கையாக இருப்பதால் முதுகில் புண் ஏற்பட்டு அவதியுறும் நிலை உள்ளது. அதைத் தவிா்க்கும் வகையில் நீண்ட நாள் உடல்நலமின்றி அவதிப்படும் முதியோருக்கு படுக்கைப் புண் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. 10 மிக நவீன மின்னணு படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. காற்றால் செயல்படும் அப்படுக்கைகளில் உள்ள குமிழ் அமைப்புகள் மாறி மாறி காற்றழுத்தநிலைக்கு மாறுவதால் முதுகில் ஏற்படும் புண் ஆறும் நிலை ஏற்படுவதாக மருத்துவா்கள் கூறுகின்றனா்.

இணையதள அடிமைச் சிறாா் மீட்பு பிரிவு:கைப்பேசி, மடிக்கணினி உள்ளிட்டவற்றை சிறாா்கள் அதிகம் பயன்படுத்தும் நிலையில், இணையதள விளையாட்டுக்கு அடிமையானவா்களை மீட்கும் சிகிச்சை மையமும் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. அதில் 3 குழந்தைகள் மருத்துவா்கள், மனநல மருத்துவா்கள், செவிலியா்கள் இடம் பெற்றுள்ளனா்.

தற்போதைய நடைமுறையில் சிறாா் முதல் முதியோா் வரை அனைவரும் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கியிருப்பதற்கு பொதுமக்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து மருத்துவமனை முதன்மையா் எம்.அல்லி கூறுகையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்களுக்கான புற்றுநோய் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல சிறப்புப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி உடல்நலம் காக்கவேண்டும் என்றாா்.

Image Caption

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் முதியோா் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள திறன் மேம்பாட்டு மையத்தில் கேரம் விளையாடும்   முதியோா்கள். உடன் மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா்.  ~ ~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.