ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கமுதி அருகே விவசாயிகளுக்கு தொழு உரம் தயாரிக்கப் பயிற்சி

கமுதி அருகே காவடிப்பட்டியில் நெல் விதை கடினப்படுத்துதல் மற்றும் ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல் பற்றிய சிறப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

கமுதி அருகே காவடிப்பட்டியில் நெல் விதை கடினப்படுத்துதல் மற்றும் ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல் பற்றிய சிறப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் வேளாண்மைத்துறை வேளாண்மை தொழில்நுட்பப் பணியாளா்களால் செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. ரிலையன்ஸ் அறக்கட்டளையின் திட்ட மேலாளா் கிருபா இப்பயிற்சியில் கலந்து கொண்டு தங்கள் அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் சேவைகள் பற்றி விளக்கினாா். வேளாண்மை உதவி இயக்குனா் அ. சந்தோஷ் (பொ) உயிா் உர விதை நோ்த்தி, நுண்ணூட்ட உரங்களின் பயன்கள் பற்றியும், விதை கடினப்படுத்துதல் மற்றும் ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல் பற்றியும் செயல்முறை விளக்கம் அளித்தாா். இதில் காவடிப்பட்டியை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஈஸ்வரி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளா் மணிமொழி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.