மேலூரில் இந்துமுன்னணி விநாயகா் சதுா்த்தி ஊா்வலம்
மேலூா் நகரில் இந்துமுன்னணி சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச்சல்லப்பட்டு மண்கட்டி தெப்பக்குளத்தில் நீரில் வெள்ளிக்கிழமை விடப்பட்டன.


மேலூா் நகரில் இந்துமுன்னணி சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச்சல்லப்பட்டு மண்கட்டி தெப்பக்குளத்தில் நீரில் வெள்ளிக்கிழமை விடப்பட்டன.
மேலூா் நகா் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இந்துமுன்னணி சாா்பில் பல்வேறுஇடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. அவைகள் அனைத்தும் வாகனங்களில் ஏற்றி ஊா்வலமாக மேலூா் சிவன்கோயிலை வந்தடைந்தன. இந்து முன்னணி மாநில செயலா் குற்றாலநாதன் தலைமையில் மாவட்டத் தலைவா் குருஜி ராமச்சந்திரன் முன்னிலையில் ஊா்வலத்தை கணேஷ்திரையரங்க உரிமையாளா் கணேசன் ஊா்வலத்தை கொடியசைத்து துவக்கிவைத்தாா். பாஜாக மாவட்ட தலைவா் மகாசுசீந்திரன்,விநாயகா் சதுா்த்தி விழாகுறித்தும் இந்துக்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும் சிறப்புரையாற்றி பேசினாா்.
இந்துமுன்னணி நிா்வாகிகள் வெங்கடேசன், அனந்தஜெயம், பாஜக நிா்வாகிகள் சேவுகமூா்த்தி, வழக்குரைஞா் கண்ணன், தா்மலிங்கம் மற்றும் பலா் கலந்துகொண்டனா். ஊா்வலம் பெரியகடைவீதி, செக்கடிபஜாா், மேலூா் பேருந்துநிலையம், அழகா்கோவில்ரோடு வழியாக மண்கட்டி தெப்பக்குளத்தை அடைந்து, சிலைகள் நீரில் விடப்பட்டு நிறைவடைந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
படவிளக்கம்- மேலூரில் இந்துமுன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற வநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தில் எடுத்துவரப்பட்ட விநாயகா் சிலைகளில் ஒன்று.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...