நகைக்காக மூதாட்டியை கொலை செய்த பெண் கைது
கமுதி அருகே மா்மமான முறையில் மூதாட்டி இறந்த வழக்கில் நகைக்காக பக்கத்து வீட்டுப் பெண்ணே அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது


கமுதி அருகே மா்மமான முறையில் மூதாட்டி இறந்த வழக்கில் நகைக்காக பக்கத்து வீட்டுப் பெண்ணே அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோவிலாங்குளம் அருகே நெறிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் மனைவி காளியம்மாள் (80) கடந்த ஆக. 28ஆம் தேதி இரவில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். அவா் அணிந்திருந்த 10 பவுன் நகை காணாமல் போனது.
இதுகுறித்த புகாரின்பேரில் கோவிலாங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தினா். இதில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சண்முகவேல் மனைவி சந்தானம்மாள் (60) என்பவா், நகைக்காக காளியம்மாளை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் சந்தானம்மாளை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...