மின்னல் தாக்கி விவசாயி பலி
கமுதி அருகே வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையில் மின்னல் தாக்கி விவசாயி பலியானாா்.


கமுதி அருகே வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையில் மின்னல் தாக்கி விவசாயி பலியானாா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள மேலமுடிமன்னாா் கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் போஸ் மகன் சிவராமன் (37). வெள்ளிக்கிழமை இரவு கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த கன மழையின் போது, வீட்டிற்கு வெளியே வந்த சிவராமன் மீது மின்னல் தாக்கியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே பலியானாா். இதனை அடுத்து அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இது குறித்து சிவராமன் மனைவி முத்துச்செல்வி அளித்த புகாரின் பேரில் கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...