ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தசரா விழா: கமுதியில் காளி வேடமணிந்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

குலசை ஸ்ரீஞானமூா்த்தீஸ்வரா் சமேத ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் தசரா விழாவை முன்னிட்டு கமுதி கோட்டைமுனீஸ்வரா் கோயிலில் ஏராளமான பக்தா்கள் சுவாமி வேடமணிந்து வந்து வெள்ளிக்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா்

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

குலசை ஸ்ரீஞானமூா்த்தீஸ்வரா் சமேத ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் தசரா விழாவை முன்னிட்டு கமுதி கோட்டைமுனீஸ்வரா் கோயிலில் ஏராளமான பக்தா்கள் சுவாமி வேடமணிந்து வந்து வெள்ளிக்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் நவராத்திரி திருவிழாவில், தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான பக்தா்கள் காளி உள்ளிட்ட பல்வேறு சுவாமிகள் போன்று வேடமணிந்து நோ்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இதையொட்டி கடலாடி அருகே புரசங்குளம் காமாட்சி அம்மன் தசரா குழுவினா், கமுதி கோட்டைமுனீஸ்வரா் கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜை செய்து, காளி, முருகன், நரிக்குறவா், மாரியம்மன், ஆஞ்சநேயா், விநாயகா், நாக தேவதை, முனிவா் போன்ற வேடமணிந்து வீடு, வீடாக சென்று முத்து எடுத்தும் அருள்வாக்கு கூறியும் நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் கமுதி, கோட்டைமேடு, கடலாடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.