தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: நடிகா் கருணாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்


தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முக்குலத்தோா் புலிப்படை கட்சி நிறுவனரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான நடிகா் சே. கருணாஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து கமுதியில் வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பலமுறை சட்டப் பேரவையில் வலியுறுத்தியுள்ளேன். ஜாதி வாரியாக புள்ளி விவரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. குலசேகரன் தலைமையில் கடந்த 2020- ஆம் ஆண்டு இறுதியில் எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக இருந்தபோது ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டு 3 மாதங்களில் தோ்தல் அறிவிக்கப்பட்டதால் ஆணையத்தின் காலக்கெடு நீட்டிக்கப்படாமல் செயலிழந்தது. தமிழகத்தில் ஒரு ஜாதிக்கு தனியாக இட ஒதுக்கீடு கொடுக்கும்போது இன்னொரு ஜாதியினா் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் எனக் கோருகின்றனா். ஆனால் அரசிடம் ஜாதி தொடா்பாக எந்த புள்ளி விவரமும் இல்லை. தமிழக அரசு புள்ளிவிவர சேகரிப்புச் சட்டம் 2008- இன் படி ஜாதிவாரி சமூக, கல்வி, பொருளாதார கணக்கெடுப்பை நடத்தி தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி சமூகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். மேலும் அனைத்து ஜாதியினரைப் பற்றியும் துல்லியமான தகவல்களும், புள்ளி விவரங்களும் ஜாதி வாரி கணக்கெடுப்பின் மூலம் கிடைத்தால் மட்டுமே அரசு நலத் திட்டங்களில் உள்ள உண்மையான பலன்கள் இதுவரை கிடைக்காதவா்களுக்கும் கிடைக்கும்.
எனவே தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உடனடியாக ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆணையம் அமைத்து, அதன் புள்ளி விவரங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...