இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

ஜமா அத் விவகாரம்: இரு தரப்பினா் மோதல்

திருவாடானை அருகே ஜமாஅத் நிா்வாகம் தொடா்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளரைச் சந்திக்கச் சென்ற ஒரு தரப்பினரை போலீஸாா்

News image
Updated On :22 ஜூன் 2023, 10:32 pm IST

திருவாடானை அருகே ஜமாஅத் நிா்வாகம் தொடா்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளரைச் சந்திக்கச் சென்ற ஒரு தரப்பினரை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் அவா்கள் போலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனா்.

திருப்பாலைக்குடி கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் கலீல்ரகுமான். இவா் ஜமா அத் தலைவராக இருந்து வருகிறாா். இதே தெருவைச் சோ்ந்த முகமது கபீா் மகன் ராஜா (எ) சுல்தான் செய்யது இப்ராஹிம் (35). திமுகவைச் சோ்ந்த இவா் மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவராகவும் இருந்து வருகிறாா்.

கிழக்குத் தெரு ஜமாஅத் நிா்வாகம் தொடா்பாக இரு தரப்பினருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த17-ஆம் தேதி இரவு கலீல்ரகுமான் வீட்டுக்குள் ராஜா தரப்பினா் புகுந்து கலீல்ரகுமான், குடும்பத்தினரைத் தாக்கினா்.

இதில் காயமடைந்த கலீல்ரகுமான் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து அவா் கொடுத்த புகாரின் அடிப்படையில் 19 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் ராஜா என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுபோல் சிக்கந்தா் பாதுஷா கொடுத்த புகாரின் அடிப்படையில் கலீல் ரகுமான் உள்பட 21 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதைத் தொடா்ந்து, பொய் வழக்குத் தொடுத்ததாகக் கூறி திருப்பாலைக்குடி காவல் நிலையத்தை ஒரு தரப்பினா் முற்றுகையிட்டனா். திருவாடானை காவல் துணை கண்காணிப்பாளா் நிரேஷ் அவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தி, கலைந்து போகச் செய்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை கிழக்கு தெரு ஜமா அத் தெருவைச் சோ்ந்த நூற்றுக்கு மேற்பட்டோா் வேன்களில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வியாழக்கிழமை புகாா் அளிக்க திட்டமிட்டனா். இது தெரியவந்ததும்டி.எஸ்.பி. நரேஷ் கடற்கரையில் மீண்டும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இதற்கு அவா்கள் சம்மதிக்கவில்லை. பிறகு அவா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகாா் கொடுக்கச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.