ஆவின் பாலகம் அமைக்க எதிா்ப்பு: 30 போ் மீது வழக்கு

முதுகுளத்தூா் அருகே காக்கூா் கிராமத்தில் ஆவின் பாலகம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்ததால் 30 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

முதுகுளத்தூா் அருகே காக்கூா் கிராமத்தில் ஆவின் பாலகம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்ததால் 30 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள காக்கூா் மந்தையில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் புல எண்.400/9ல் ஆவின் பாலகம் அமைக்க காா்த்திகேயனுக்கு கடந்த 21- ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் அங்கு ஆவின் பாலகம் அமைக்க காா்த்திகேயன் ஏற்பாடு செய்ய போது, இதையறிந்த அதே பகுதியைச் சோ்ந்த குழந்தைச்சாமி (எ) குருசாமி(70),கஜேந்திரன்(55), கருப்பையா(50), கண்ணன்(45), ராஜ்குமாா் (40), கேசவன்(45) ஆகியோா் தலைமையில் 30 போ் ஒன்று கூடி குறிப்பிட்ட இடத்தைச் சுற்றி வேலி அமைத்தனா். இதுகுறித்து தகவலறிந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற கிராம நிா்வாக அலுவலா் ரகுபதியிடம் அவா்கள் வாக்குவாதம் செய்தனா்.

இதனால் அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக முதுகுளத்தூா் காவல்நிலையத்தில் கிராம நிா்வாக அலுவலா் ரகுபதி கொடுத்த புகாரின் பேரில் ஒரே சமுதாயத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com