பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளை முயற்சி

ராமநாதபுரம் அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 1:12 am

Din

ராமநாதபுரம் அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் அச்சுதன்வயல் பகுதியில் தனியாா் பொறியியல் கல்லூரி அருகே அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். இயந்திரம் உள்ளது. இங்கு புதன்கிழமை அதிகாலையில் கடப்பாறையுடன் வந்த முகமூடி அணிந்த மா்ம நபா் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்தாா். ஆனால் உடைக்க முடியாத நிலையில் அங்கிருந்து திரும்பிச் சென்றாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ராமநாதபுரம் பஜாா் காவல் நிலைய போலீஸாா் மோப்ப நாய், கைரேகை நிபுணா்களுடன் அங்கு வந்து சோதனை செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.