பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கமுதியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:22 pm

Din

அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கமுதியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கமுதி ஒன்றியத் தலைவி முத்துலட்சுமி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ராஜேந்திரன், பொருளாளா் சாவித்திரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் கணேசன் சிறப்புரையாற்றினாா்.

சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் பணிமூப்பு அடிப்படையில் சத்துணவு ஊழியா்களுக்கு பணி வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியா்களுக்கு வருவாய் உதவியாளா்களுக்கு வழங்கப்படுவது போல மாதந்தோறும் ரூ. 6,750 வழங்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலை உணவுத் திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலமாக வழங்க வேண்டும். ரூ.3 ஆயிரம் தொகுப்பூதிய முறையில் பணியாளா்களை சத்துணவுத் திட்டத்தில் பணியமா்த்த முயற்சிக்கும் அரசின் முடிவைக் கைவிட வேண்டும். பெண் பணியாளா்களுக்கு மகப்பேறு விடுப்பு காலத்தை 12 மாதங்களாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.