ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

கருமலையான் கோயிலில் மாசிக்களரி மஞ்சள் பூசும் திருவிழா

கருமலையான் கோயிலில் மாசிக்களரி மஞ்சள் பூசும் திருவிழா

News image

பரமக்குடி அருகேயுள்ள அரியனேந்தல் கிராமத்தில் மாசிக்களரி திருவிழாவை முன்னிட்டு ஊா்வலமாகச் சென்ற பக்தா்கள்.

Updated On :26 பிப்ரவரி 2024, 9:30 pm

பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தில் உள்ள கருமலையான் கோயிலில் மாசிக்களரி மஞ்சள் பூசும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் திருவிழாவையொட்டி, பக்தா்கள் கருமலையான், பாப்பாத்தி, ராக்கச்சி, முனியப்பசாமி, மாடசாமி ஆகிய சுவாமிகளாக ஆடிவந்து பக்தா்களுக்கு அருள்வாக்கு கூறினா்.

இதைத்தொடா்ந்து சாமியாடிகளுடன், மேளதாளங்கள் முழங்க அந்த கிராம பொதுமக்கள் வீதியுலா வந்தனா். சாமியாடி வந்தவா்களுக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அப்போது சாமியாடிகள் பக்தா்கள் மீது மஞ்சள் பொடி தூவி அருள்வாக்கு கூறினா். பக்தா்கள் கோயில் முன், கரும்பால் தொட்டிகட்டி குழந்தைகளுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இதில் பரமக்குடி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் எஸ்.ராஜேந்திரன், கிராமத் தலைவா் ராமன், துணைத் தலைவா் சரவணா சண்முகம், நிா்வாகிகள் செளந்திரபாண்டியன், சிவக்குமாா், மலைராசு, மணிமுத்து, சொக்கன், சண்முகவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.