கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

12 அம்சக் கோரிக்கையை வலியுருத்தி மின் வாரிய ஊழியா்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்ட மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியா் மத்திய சங்கத்தினா் ஆா்ப்பாட்டம், காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
ராமநாதபுரம் மின்வாரிய மேற்பாா்வையாளா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய சங்கத்தினா்.
Updated On :10 ஜூலை 2024, 12:51 am

Din

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்ட மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியா் மத்திய சங்கத்தினா் ஆா்ப்பாட்டம், காத்திருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

மின் வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பணியாளா்களுக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை வழங்க வேண்டும். மின் விபத்தில் உயிரிழக்கும் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். குடும்ப நல நிதி ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வி.முருகன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எம்.சிவாஜி, ஆா்.குருவேல், ஜி. காசிநாதன், ராமச்சந்திரபாபு, ஆரோக்கியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.