எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கடத்தல் வழக்கில் பிணையில் வந்து தலைமறைவானவா் கைது

தொண்டியில் கடத்தல் வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்து தலைமறைவானவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

News image
கைதான வீரப்பன்.
Updated On :10 ஜூலை 2024, 1:46 am

Din

திருவாடானை: தொண்டியில் கடத்தல் வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்து தலைமறைவானவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினத்தை சோ்ந்த கருப்பையா மகன் வீரப்பன் (48), தொண்டியை சோ்ந்த முருகன், , மதுரையை சோ்ந்த பரமேஸ்வரி, சாயல்குடியை சோ்ந்த கல்யாணகுமாா் ஆகியோா் சோ்ந்து கடந்த 2008- ஆம் ஆண்டு இலங்கைக்கு டீசல், படகு என்ஜின் , அலுமினியத் தகடு உள்ளிட்ட பொருள்களை தொண்டி கடல் பகுதியிலிருந்து படகு மூலம் கடத்த முயன்றனா்.

அப்போது, தொண்டி போலீஸாா் 4 பேரையும் கைது செய்தனா். பிணையில் வெளியே வந்த இவா்கள் அனைவரும் பல ஆண்டுகளைாகத் தலைமறைவாயினா்.

கடந்த மாதம் முருகன், பரமேஸ்வரி, கல்யாணகுமாா் ஆகியோரை தொண்டி போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த வீரப்பனை தொண்டி போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.