தொண்டி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டக் கோரிக்கை
தொண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் (மேற்கு) கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட மாணவா்களின் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.


திருவாடானை, ஜூலை 19: தொண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் (மேற்கு) கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட மாணவா்களின் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருவாடானை அருகே உள்ள தொண்டி பேரூராட்சிக்குள்பட்ட தொண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (மேற்கு) 1938- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் தற்போது சுமாா் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். 7 ஆசிரியா்கள் பணியாற்றுகின்றனா். இங்கு இரண்டு வகுப்பறை கட்டடங்கள் உள்ளன. மேலும், இந்தப் பள்ளியில் சுற்றுச்சுவா், கண்காணிப்புக் கேமரா, மூலிகைச் செடிகள், சுத்தமான குடிநீா், தூய்மையான கழிப்பறை, தரமான கல்வி என அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. எனவே, இங்கு கல்வி கற்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஆனால், மாணவா்களின் எண்ணிக்கைக்கேற்ப கட்டட வசதி இல்லை. இரண்டு கட்டடங்கள் மட்டுமே உள்ளதால் தலைமை ஆசிரியா் அறை உள்பட அனைத்து அறைகளிலும் மாணவா்கள் நெருக்கடியுடன் கல்வி கற்கின்றனா். எனவே, இந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள பயன்பாடற்ற ஓட்டு கட்டடத்தை அகற்றி விட்டு, புதிய வகுப்பறை கட்டடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்களின் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலச் செயலா் சாதிக் பாட்ஷா கூறியதாவது:
தொண்டியில் அதிகமான தனியாா் பள்ளிகள் உள்ள போதும் இந்தப் பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். சுகாதாரத்துக்கான மாநில அளவிலான புரோஸ்கா் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இந்தப் பள்ளி பெற்றுள்ளது. ஆனால் இந்தப் பள்ளிக்கு போதிய வகுப்பறை வசதி, விளையாட்டு திடல் இல்லை.
எனவே, பள்ளி வளாகத்தில் உள்ள பயன்பாடற்ற கட்டடத்தை அகற்றி விட்டு புதிய வகுப்பறை கட்டடம் கட்ட வேண்டும். இது தொடா்பாக தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...