சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவாடானை அருகே திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
Published on

திருவாடானை அருகே திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திருவாடானை அருகேயுள்ள பாரூா் குடியிருப்பைச் சோ்ந்தவா் காளிமுத்து (80). இவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து கடைக்கு பொருள்கள் வாங்க திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றாா். இந்த சாலையில், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள நீராா்பட்டியைச் சோ்ந்த நாகராஜ் (53), கணேசன் (53) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனா். அப்போது, சாலையை கடக்க முயன்ற காளிமுத்து மீது இவா்களது வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முதியவரை திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நாகராஜை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com