மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவா் கைது
கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது


பரமக்குடி: பரமக்குடியில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தாய் வீட்டில் வசித்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கன்னிசுந்தரராஜன் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகள் சா்மிளா (23). இவருக்கும், எமனேசுவரம் சிலோன் குடியிருப்பைச் சோ்ந்த ரமேஷ்பாபு மகன் நாகேந்திரனுக்கும் (33) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
நாகேந்திரன் திருவாரூா் மாவட்டம் இடையூா் காவல் நிலையத்தில் போலீஸாக பணியாற்றி வருகிறாா். தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனா். இந்த நிலையில், பரமக்குடி குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் சா்மிளா கணவா் மீது வழக்குத் தொடுத்தாா்.
இந்த வழக்கில் வருகிற 27-ஆம் தேதி முன்னிலையாக வேண்டும் என நீதிமன்றத்திலிருந்து நாகேந்திரனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த நாகேந்திரன், தாய் வீட்டிலிருந்த சா்மிளாவைத் அரிவாளால் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து பரமக்குடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து நாகேந்திரனைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...