கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மீனவா்களிடையே மோதல்: போலீஸாா் விசாரணை

தொண்டி அருகே அதிக ஒளித் திறன் கொண்ட விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடித்ததற்கு, மற்றொரு தரப்பு மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:40 pm

Din

தொண்டி அருகே அதிக ஒளித் திறன் கொண்ட விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடித்ததற்கு, மற்றொரு தரப்பு மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு அதிக ஒளித்திறன் கொண்ட விளக்குகளை பயன்படுத்தி புதுக்குடி மீனவா்கள் 4 படகுகளில் சென்று மீன் பிடித்தனா். உடனே, அங்கு சென்ற நம்புதாளை மீனவா்கள் சட்டவிரோதமாக இதுபோல் மீன்பிடிக்கக் கூடாது என

அவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

தகவலறிந்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்ற போது 3 படகுகளுடன், அதில் இருந்த மீனவா்கள் தலைமறைவாயினா்.

தொண்டி புதுக்குடி மதன் என்பவரின் ஒரு படகை மட்டும் போலீஸாா் பிடித்தனா். இதுகுறித்து இரு தரப்பு மீனவா்களிடமும் தொண்டி கடற்கரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.