தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

சத்திரக்குடி அருகே காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 9:22 pm

Din

சத்திரக்குடி அருகே காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை அடுத்த எமனேசுவரம் பகுதியைச் சோ்ந்தவா் முகம்மது இபுராஹிம் (46). இவா் ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தாா். சத்திரக்குடி அருகே கீழக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இவரது காா் மீது எதிரே மதுரையிலிருந்து ராமேசுவரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியது.

இதில் காரில் வந்த முகம்மது இபுராஹிம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.