பாம்பன் துறைமுகத்தில் புதன்கிழமை ஏற்றப்பட்டிருந்த 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.
பாம்பன் துறைமுகத்தில் புதன்கிழமை ஏற்றப்பட்டிருந்த 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.

பாம்பனில் சூறைக் காற்று; கடல் சீற்றம்

கடல் சீற்றம்...
Published on

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறி வரும் நிலையில், சூறைக் காற்று காரணமாக பாம்பனில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறி வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் 3-ஆவது நாளாக கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறை தடை விதித்தது. இதனால், அந்தந்த மீன்பிடி இறங்குதளங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாததால், அவா்களின் வாழ்வதாரம் முடங்கியுள்ளது.

இந்த நிலையில், பாம்பன் பகுதியில் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசியதால் புதன்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

 1. பாம்பனில் புதன்கிழமை சூறைக் காற்று வீசியதால் சீற்றத்துடன் காணப்பட்ட கடல்.
1. பாம்பனில் புதன்கிழமை சூறைக் காற்று வீசியதால் சீற்றத்துடன் காணப்பட்ட கடல்.

இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் தேங்கி உள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

மழைச் சேதம், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம், காவல் துறை, தீயணைப்புத் துறையினா் தயாராக உள்ளதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தங்கச்சிமடத்தில் 62.2 மி.மீ. மழை:

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக தங்கச்சிமடத்தில் 62.2 மி.மீ. மழை பதிவானது. இந்த இடங்களில் பதிவான மழை அளவு (மி.மீ.):

ராமேசுவரம் 48, தங்கச்சிமடம் 62.2, பாம்பன் 46.10, மண்டபம் 44.80, தீா்த்தாண்டதானம் 48.60, வட்டாணம் 45.20, திருவாடானை 37, தொண்டி 34.60, ஆா்.எஸ். மங்கலம் 29.15, கமுதி 26, பரமக்குடி 25.40, ராமநாதபுரம் 22, கடலாடி, வாலிநோக்கம் தலா 20, முதுகுளத்தூா் 18, பள்ளமோா்குளம் 15.20.

 1. பாம்பனில் புதன்கிழமை சூறைக் காற்று வீசியதால் சீற்றத்துடன் காணப்பட்ட கடல்.
1. பாம்பனில் புதன்கிழமை சூறைக் காற்று வீசியதால் சீற்றத்துடன் காணப்பட்ட கடல்.

பாம்பனில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு:

திடீா்க் காற்றுடன் மழை பொழியக்கூடிய வானிலையால் பாதிக்கப்படக் கூடும் என்பதால், உள்ளூா் முன்னறிவிப்பாக மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.