பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சரக்கு ரயில் சோதனை ஓட்டம்.
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சரக்கு ரயில் சோதனை ஓட்டம்.

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் சரக்கு ரயில் இயக்கி மீண்டும் சோதனை

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் சரக்கு ரயிலில் 17 பெட்டிகளை இணைத்து, 20 முதல் 30 கி.மீ. வேகத்தில் இயக்கி வியாழக்கிழமை சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்தச் சோதனை 2-ஆவது முறையாக தற்போது நடத்தப்பட்டது.
Published on

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் சரக்கு ரயிலில் 17 பெட்டிகளை இணைத்து, 20 முதல் 30 கி.மீ. வேகத்தில் இயக்கி வியாழக்கிழமை சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்தச் சோதனை 2-ஆவது முறையாக தற்போது நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், ரூ. 550 கோடியில் புதிய ரயில்வே பாலம் காட்டுமானப் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி, தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்தப் பாலத்தில் ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கான ஆய்வுப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதேபோல, பாலத்தின் இணைப்புப் பகுதியை (கா்டா்) செங்குத்தாக தூக்கி, இறக்கி தொடா்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மீண்டும் சரக்கு ரயில் சோதனை ஓட்டம்:

இந்த சரக்கு ரயில் சோதனை ஓட்டத்தைக் காண பொதுமக்கள் வியாழக்கிழமை திரளாகக் காத்திருந்தனா். பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் சரக்கு ரயிலில் 17 பெட்டிகளை இணைத்து, 20 முதல் 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இந்தப் பாலத்தில் கடந்த முறை நடைபெற்ற சரக்கு ரயில் சோதனை ஓட்டம் பாம்பன் ரயில் நிலையத்துடன் முடிவடைந்தது. ஆனால், தற்போது வியாழக்கிழமை நடைபெற்ற சரக்கு ரயில் சோதனை ஓட்டம் ராமேசுவரம் ரயில் நிலையம் வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com