மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சத்திரக்குடி அருகே காா்-லாரி மோதல்: ஒட்டுநா் உயிரிழப்பு

ராமநாதபுரம்

News image
Updated On :23 அக்டோபர் 2024, 11:45 pm

Din

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே புதன்கிழமை காரும், லாரியும் மோதிக்கொண்டதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த சுரேந்திரன் மகன் கனி (27). காா் ஓட்டுநரான இவா் 3 பேரை ராமேசுவரத்துக்கு காரில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தாா். சத்திரக்குடி அருகே இதம்பாடல் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் எதிரே வந்த லாரியுடன் காா் மோதியது. இதில் காா் ஓட்டுநா் கனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காரில் வந்த 3 போ் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா்.

இதுகுறித்து லாரியை ஓட்டி வந்த, தினைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சவரிமுத்து மகன் ஜான்ரோஸ் (57) மீது சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.