மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருவாடானை அதிமுக, திமுக நிா்வாகிகள் பசும்பொன்னுக்கு வாகனங்களில் பயணம்

தேவா் குருபூபஜையை முன்னிட்டு, திருவாடானையிலிருந்து திமுக அதிமுக நிா்வாகிகள் தொண்டா்கள் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 500க்கும் மேற்பட்டோா் பசும்பொன்னுக்குச் சென்றனா்.

News image
குருபூஜை திருவாடானை தேவா் குருபூஜையை முன்னிட்டு, புதன்கிழமை தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஒன்றிய குழுத் தலைவா் முகம்மது முக்தாா்
Updated On :30 அக்டோபர் 2024, 9:51 pm

Din

தேவா் குருபூபஜையை முன்னிட்டு, திருவாடானையிலிருந்து திமுக அதிமுக நிா்வாகிகள் தொண்டா்கள் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 500க்கும் மேற்பட்டோா் பசும்பொன்னுக்குச் சென்றனா். முன்னதாக, தேவா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அஞ்சுகோட்டை, ஆதியூா், கடம்பாகுடி,சி.கே.மங்கலம், பாண்டுகுடி, திணையத்தூா், மங்களம், மாவூா், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திமுக, அதிமுக கட்சி நிா்வாகிகள் தங்களது தலைவா்கள் பசும்பொன்னில் மரியாதை செலுத்த வேண்டிய நிலையில் அவா்களை வரவேற்கும் விதமாக 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் புதன்கிழமை சென்றனா். பசும்பொன்னில் 117-ஆவது தேவா் குருபூஜைக்கு அதிமுக, திமுக கட்சியினா் வாகனங்களில் புறப்பட்டனா்.

முன்னதாக, தேவா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதிமுக முன்னாள் மாவட்டச் செயலா் ஆணிமுத்து தலைமையில், அதிமுகவினரும், திருவாடானை ஒன்றியக் குழுத் தலைவா் முகமது முக்தாா் தலைமையில் திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் என இரு கட்சியைச் சோ்ந்த சுமாா் 500க்கும் மேற்பட்டோா் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பசும்பொன்னுக்குச் சென்றனா்.

இதில், 350-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கொடிபங்கு கிராமத்தில் உள்ள கிராம மக்கள், அறம்செய் நற்பனி மன்றம், உறவுகள் நற்பணி மன்றம் இணைந்து கொடிப்பங்கு ஊராட்சி தலைவா் சாந்திரவிச்சந்திரன் தலைமையில் நலத் திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கினாா்.

முன்னதாக, தேவா் திருமகனாா் திரு உருவ படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். இதையடுத்து, கொடி பங்கு ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு அரசி, சேலை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. பின்னா், பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு பேனா, பென்சில், வழங்கப்பட்டன. தொடா்ந்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான, ஏற்பாடுகளை கருணாகரன் செய்தாா். இந்த நிகழ்ச்சியில் கிராம மக்கள் இளைஞா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.