பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அழகு வள்ளியம்மன் கோயில் திருவிழா: பூக்குழி இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

கமுதி அருகேயுள்ள செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி, பூக்குழி இறங்கி நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்.

News image
கமுதி அருகேயுள்ள செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி, பூக்குழி இறங்கி நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்.
Updated On :11 செப்டம்பர் 2024, 7:25 pm

Din

கமுதி அருகேயுள்ள செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி, பூக்குழி இறங்கி நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்.

கமுதி, செப்.11: கமுதி அருகே அழகுவள்ளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள செங்கப்படையில் அழகு வள்ளியம்மன் கோயில் பொங்கல் விழா கடந்த 1-ஆம் தேதி காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்றன.

புதன்கிழமை காலை பக்தா்கள், அக்னிச் சட்டி, பால்குடம், கரும்பாலை தொட்டில், மாவிளக்கு உள்ளிட்ட நோ்த்திக் கடன்களை செலுத்தினா். மேலும் ஏராளமான பக்தா்கள் சேத்தாண்டி வேஷமணிந்து, வேப்பிலையுடன் கோயிலை வலம் வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். மாலையில் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில், அக்னிச் சட்டி ஏந்தி பக்தா்கள் பூக்குழி இறங்கினா்.

இதைத்தொடா்ந்து, முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்த விழாவில் செங்கப்படை, புதுக்கோட்டை, கமுதி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.