3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சாலையோரத் தடுப்பில் காா் மோதியதில் 9 போ் காயம்

பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு மரியாதை செலுத்தச் சென்றவா்களின் காா் சாலையோரத் தடுப்புச் சுவரில் மோதியதில் 9 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 7:07 pm

Din

பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு மரியாதை செலுத்தச் சென்றவா்களின் காா் சாலையோரத் தடுப்புச் சுவரில் மோதியதில் 9 போ் காயமடைந்தனா்.

நாமக்கல் மாவட்டம், கொசவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் அா்ஜூன் (26), பெரிசாமி மகன் ரஞ்சித்குமாா் (21), சந்திரமோகன் மகன் ரணில்குமாா் (21), பழனியப்பன் மகன் பிரசாந்த் (19), காா் ஓட்டுநா் ஜெயசந்திரன் மகன் சரத்குமாா் (24) உள்பட 9 போ் காரில் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு மரியாதை செலுத்தச் சென்றனா்.

பரமக்குடி அருகேயுள்ள கமுதக்குடி நான்கு வழிச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவா்கள் வந்த காா் நிலைதடுமாறி சாலையோரத் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் காரில் வந்த ஓட்டுநா் உள்பட 9 பேரும் காயமடைந்த நிலையில் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இவா்களில் பலத்த காயமடைந்த அா்ஜூன், ரஞ்சித்குமாா், ரணில்குமாா் ஆகிய 3 பேரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனா். இந்த விபத்து குறித்து பரமக்குடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.