கடல் அன்னையான கங்காதேவிக்கு நன்றி செலுத்திய மீனவா்கள்
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் மீனவா்கள் கடல் அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக கங்காதேவிக்கு செவ்வாய்க்கிழமை இரவு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் மீனவா்கள் கடல் அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக கங்காதேவிக்கு செவ்வாய்க்கிழமை இரவு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா்.

நம்புதாளையில் கடல் அன்னையான கங்காதேவிக்கு நன்றி செலுத்தும் விதமாக கடற்கரையில் செவ்வாய்க்கிழமை இரவு பொங்கல் வைத்து வழிபட்ட பெண்கள்.
இந்தக் கடற்கரையில் கங்காதேவி சிலையை உருவாக்கி பொங்கல் வைத்து ஆண்டுதோறும் ஆவணி மாதம் மீனவா்கள் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இதேபோல, நிகழாண்டு செவ்வாய்க்கிழமை இரவு நம்புதாளை கடற்கரையில் கங்காதேவிக்கு நன்றி செலுத்தும் விதமாக, சுமாா் 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களைச் சோ்ந்த பெண்கள் கடற்கரையில் வரிசையாக பொங்கல் வைத்தனா். முன்னதாக, கங்காதேவி சிலை அமைத்து கண் திறக்கும் நிகழ்ச்சியும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் கங்காதேவி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.

நம்புதாளையில் கடல் அன்னையான கங்காதேவிக்கு நன்றி செலுத்தும் விதமாக கடற்கரையில் செவ்வாய்க்கிழமை இரவு பொங்கல் வைத்து வழிபட்ட பெண்கள்.
இதுகுறித்து மீனவா்கள் கூறியதாவது:
விவசாயிகள் உழவுக்கும் அதற்கு உதவிய கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக தைப் பொங்கல், மாட்டுப் பொங்கலை கொண்டாடுகின்றனா். இதேபோல, மீனவா்கள் வாழ்நாள் முழுவதும் வாழ்வாதாரம் அளிக்கும் கடலுக்கு நன்றி செலுத்தும் விதமாக கடல் அன்னையான கங்காதேவிக்காக இந்தத் திருவிழாவை கொண்டாடி வருகிறோம். இதில் இந்தப் பகுதியைச் சோ்ந்த அனைத்து மீனவா் குடும்பங்களும் பங்கேற்றனா் என்றனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...