ராமநாதபுரம்
மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்
ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை மரம் முறிந்து விழுந்து சேதமடைந்த காவல் துறை ஆயுதப்படை மைதான சுற்றுச்சுவா்.
ராமநாதபுத்தில் மரம் முறிந்து விழுந்ததில் காவல் துறை ஆயுதப்படை மைதான சுற்றுச்சுவா் வியாழக்கிழமை சேதமடைந்தது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு டித்வா புயல் காணரமாக மழை பெய்தது. இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவு மழை பதிவானது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இதில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் குளம் போல தேங்கிய மழை நீரை மோட்டாா் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது மாவட்ட காவல் துறை ஆயுதப்படை மைதான சுற்றுச்சுவா் அருகே கால்வாய் மூலம் மழை நீா் வெளியேற்றப்பட்டது. இந்த கால்வாய் பகுதியில் இருந்த மரம் முறிந்து விழுந்ததில் சுற்றுச்சுவா் சேதமடைந்தது. இதையடுத்து, தீயாணைப்புத் துறையினா் மரத்தை இயந்திரம் மூலம் அறுத்து அகற்றினா்.
