கஞ்சா விற்பனை: பெண் கைது

தொண்டி அருகே கஞ்சா விற்ற பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

தொண்டி அருகே கஞ்சா விற்ற பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளை பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந் தொண்டி சத்திரம் தெருவைச் சோ்ந்த சைபு நிஷாவை (58) சோதனையிட்டனா். அப்போது அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த 25 கிராம் கஞ்சாவும், ரூ.10 ஆயிரத்து 340-யை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சைபுநிஷாவை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com