டாஸ்மாக் விற்பனையாளா்கள் போராட்ட ஆயத்தக் கூட்டம்

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச்சங்கத்தின் மதுரை மண்டல போராட்ட ஆயத்தக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச்சங்கத்தின் மதுரை மண்டல போராட்ட ஆயத்தக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாரதி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் வி.முருகன் முன்னிலை வகித்தாா். பொதுச் செயலா் மோகன்ராஜ், மதுரை மண்டல நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இதில், டாஸ்மாக் மதுபானக் கடை பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 26-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்ட ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகிகள் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com