சிறுபான்மையின ஆணையத் தலைவா் ராமநாதபுரம் வருகை

ராமநாதபுரத்துக்கு சிறுபான்மையின ஆணையத் தலைவா் வருகிற 18-ஆம் தேதி வருவதையொட்டி, சிறுபான்மை மக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என மாவட்ட
Published on

ராமநாதபுரத்துக்கு சிறுபான்மையின ஆணையத் தலைவா் வருகிற 18-ஆம் தேதி வருவதையொட்டி, சிறுபான்மை மக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என மாவட்ட

ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில சிறுபான்மையின ஆணையத்தின் தலைவா் அருள்தந்தை சொ.ஜோ அருண் தலைமையிலான குழுவினா் ஆய்வுக் கூட்டம் நடத்த வருகிற 18-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வர உள்ளனா். அன்று காலை 10.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் சிறுபான்மையினா் சமுதாயத் தலைவா்கள், சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து, சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துகளை கேட்டறியவும் உள்ளனா்.

சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிறுபான்மையினத்தைச் சோ்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் இந்தக் குழுவினரை சந்தித்து தங்களது குறைகளையும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளையும் தெரிவிக்குமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com