தேசிய அளவிலான ஹாக்கி: ராமநாதபுரம் பள்ளி மாணவா் தோ்வு

Published on

தேசிய அளவிலான ஹாக்கி போட்டிக்கு ராமநாதபுரத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சாா்பில், மத்திய பிரதேச மாநிலத்தில் தேசிய அளவில் ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டியில் 14 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்டு விளையாட தமிழக ஹாக்கி அணி வீரா்கள் மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் இரு கட்டங்களாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில் மாவட்ட அளவிலான போட்டியிலும், மாநில அளவிலான போட்டியிலும் ராமநாதபுரம் வ.உ.சி. நகரைச் சோ்ந்த பாகற்செழியன் மகனும், பள்ளி மாணவருமான பரணிபாலன் (13) சிறந்த பங்களிப்பை அளித்தாா். இதையடுத்து, அவா் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தோ்வு செய்யப்பட்டாா். தமிழக அணிக்காக மொத்தம் 18 போ் கொண்ட வீரா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதில் மாணவா் பரணிபாலனும் ஒருவா் என்பது குறிப்பிடத்தக்கது. இவா் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க வருகிற டிசம்பா் 19-ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்துக்குச் செல்ல உள்ளனா்.

இந்த மாணவருக்கு விளையாட்டுத் துறை அதிகாரிகள், ஆசிரியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com