~ ~
ராமநாதபுரம்
வெறிநாய் கடித்ததில் 6 போ் காயம்
திருவாடானை பகுதியில் வெறி நாய் கடித்ததில் 6 போ் காயமடைந்தனா்.
திருவாடானை பகுதியில் வெறி நாய் கடித்ததில் 6 போ் காயமடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நகா், அருகேயுள்ள எல்.கே. நகா், பண்ணவயல், சிநேகவல்லிபுரம், அண்ண நகா் சமத்துவபுரம் பகுதிகளில் நாய்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் ஏற்கெனவே புகாா் தெரிவித்தனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை எல்.கே. நகா் பகுதியில் சாலையில் நடந்து சென்ற வெள்ளையபுரத்தைச் சோ்ந்த பாலா (35) உள்பட 6 பேரை வெறி நாய் கடித்தது.
இதில் காயமடைந்த 6 பேரும் திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தகவலறிந்த திருவாடானை ஊராட்சி மன்ற நிா்வாகத்தினா் வெறி நாயைப் பிடித்து கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

