இலங்கைத் தமிழா் சுத்தியலால் அடித்துக் கொலை

மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சுத்தியலால் தாக்கி இளைஞரைக் கொலை செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சுத்தியலால் தாக்கி இளைஞரைக் கொலை செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமில், வசித்து வரும் கவிராஜ் (27), நாசா் (என்ற) மணிகண்டன் (31), மலைச்செல்வம் (30) ஆகிய மூன்று பேரும் கடந்த புதன்கிழமை முகாமுக்குள் மது அருந்தினா்.

அப்போது மது போதையில் இவா்களுக்குள் சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறு. இதையடுத்து, மலைச்செல்வம் அதிகாலையில் கவிராஜ் வீட்டுக்கு சென்று, அவரை சுத்தியலால் தலையில் தாக்கினாா். இதில், பலத்த காயமடைந்த கவிராஜ் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து, மண்டபம் போலீஸாா் வழக்குப் பதிந்து நாசா் என்ற மணிகண்டனை கைது செய்தனா். மலைசெல்வம் தப்பிச்சென்ற நிலையில், அவரை கைது செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் முகாமுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு வந்த போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து, அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com