விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் கைது

முதுகுளத்தூா் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

முதுகுளத்தூா் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் காவல் சரகத்துக்கு உள்பட்ட பேரையூா் அரியநாச்சிபுரம் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற இளைஞரைப் பிடித்து சோதனை செய்ததில், நெகிழிப் பையில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா இருந்ததும், அவா் சின்ன ஆனையூா் கிராமத்தைச் சோ்ந்த மலையாண்டி மகன் கணேசபாண்டியன் (எ) அலெக்ஸ்பாண்டியன் (34) என்பதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து பேரையூா் போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனா்.

மேலும் இவா் மீது பேரையூா், அபிராமம், மண்டலமாணிக்கம், விருதுநகா் மாவட்டம் பந்தல்குடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 12 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.