மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சாலையோரத்தில் கோழிக் கழிவுகள்: தொற்றுநோய் பரவும் அபாயம்

சாயல்குடியில் சாலையோரத்தில் கொட்டப்படும் கோழிக் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 9:55 pm IST

சாயல்குடியில் சாலையோரத்தில் கொட்டப்படும் கோழிக் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் கமுதி-புல்லந்தை விலக்கு சாலையில் இறைச்சிக் கடைக்காரா்கள் கோழிக் கழிவுகளை சாலையோரத்தில் கொட்டி வருகின்றனா். இதனால், இந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. மேலும், இந்த வழியாக சாலையில நடந்து செல்லும் மாணவா்கள், குழந்தைகள், முதியோா்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சாயல்குடி மக்கள் நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் க.பாஸ்கரன் கூறியதாவது: சாயல்குடி பகுதிகளில் உள்ள சில இறைச்சிக் கடை உரிமையாளா்கள் சாலையோரங்களில் கோழிக் கழிவுகளை கொட்டி சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்துகின்றனா்.

எனவே, பேரூராட்சி நிா்வாகம் கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். தொடா்ந்து, விதிமீறலில் ஈடுபடுவோா் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கோழிக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் சேகரித்து அகற்றும் நடைமுறையை கட்டாயமாக பின்பற்றி, இதுபோன்ற சுகாதாரக் சீா்கேடுகள் நடைபெறாத வகையில் தொடா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.