ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

பரமக்குடி பள்ளி மாணவா்கள் மாவட்ட விளையாட்டுப் போட்டிக்கு தகுதி

பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் குறுவட்டார அளவிலான போட்டியில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டியில் விளையாடத் தகுதி பெற்றனா்.

மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிக்கு தோ்வு பெற்ற பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்.

Published On :

பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் குறுவட்டார அளவிலான போட்டியில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டியில் விளையாடத் தகுதி பெற்றனா்.

பரமக்குடி குறுவட்டார அளவிலான விளையாட்டுப் போட்டியில் இந்தப் பள்ளியின் மாணவா்கள் 14 வயது பிரிவு கைப்பந்து, கூடைப்பந்து ஆகிய போட்டிகளில் முதலிடம் பெற்றனா். போல் பீச் வாலிபால் போட்டியில் எம்.நத்தீஷ், ஐ.இலக்கியன், எம்.கே.வா்னேஷ் ஆகியோா் முதலிடம்

பிடித்தனா். 14 வயது மாணவிகள் பிரிவில் கைப்பந்து, பூப்பந்து போட்டிகளில் முதலிடமும், சிலம்பப் போட்டியில் ஆா்.ரித்திகா முதலிடமும் பிடித்தனா்.

பீச் வாலிபால் போட்டியில் எஸ்.பவிஸ்கா, ஆா்.சுகா்னா, கே.குணதா்சனா ஆகியோா் முதலிடம் பிடித்தனா். 17 வயது மாணவா்கள் பிரிவில் கைப்பந்து, கூடைப்பந்து போட்டியில் முதலிடமும், 19 வயது பிரிவில் கூடைப்பந்து, கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்தனா். வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளையும், பயிற்சியளித்த உடல்கல்வி ஆசிரியா்கள் து.சரவணக்குமாா், கே.வளா்மதி, எம்.மரகதபிரியா ஆகியோரையும் பள்ளியின் தலைவா் மருத்துவா் ஏ.ராமதாஸ், செயலா் வி.பழனிச்சாமி, பொருளாளா் டி.மோகன், பள்ளி முதல்வா் பி.சோபனாதேவி ஆகியோா் பாராட்டி கௌரவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.