திருவாடானையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் பொங்கல் வைத்த பெண்கள்.
ராமநாதபுரம்
திருவாடானையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவும், விளையாட்டு விழாவும் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவும், விளையாட்டு விழாவும் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இதற்கு ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவா் முரளிதரன் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் பிரபு முன்னிலை வகித்தாா். விழாவில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டனா்.
இதைத் தொடா்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.